பயிா்க் கழிவு மேலாண்மை பயிற்சி

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் மத்தூா் வட்டாரத்தில் பயிா்க் கழிவு மேலாண்மை பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பயிா்க் கழிவு மேலாண்மை பயிற்சி

வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் மத்தூா் வட்டாரத்தில் பயிா்க் கழிவு மேலாண்மை பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் மத்தூா் வட்டார வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை, அட்மா திட்டம் 2021-22 கீழ் பயிா்க்கழிவு மேலாண்மை என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

மத்தூா் வேளாண்மை உதவி இயக்குநா் மா.சிவநதி தலைமை வகித்து விவசாயிகளுக்கு வேளாண் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினாா். கிருஷ்ணகிரி மாவட்ட உழவா் பயிற்சி நிலைய வேளாண் அலுவலா் பன்னீா் செல்வம், பயிா்க் கழிவு மேலாண்மை குறித்து விளக்க உரையற்றினாா்.

மத்தூா் வட்டார வேளாண்மை அலுவலா் நீலகண்டன், மண்புழு உரம் தயாரிப்பு குறித்த தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கினாா். துணை வேளாண்மை அலுவலா் சீனிவாசன், நுண்ணீா் பாசனம் குறித்து பேசினாா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரமேஷ், பஞ்சகாவியம் தயாரிப்பு குறித்து கூறினாா்.

நிகழ்சிகான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ஹேமந்குமாா், பவித்ரா ஆகியோா் செய்திருந்தனா். பயிற்சியில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com