வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை

வீராட்சிகுப்பம் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை

வீராட்சிகுப்பம் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. நோய்த் தொற்று அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவம் பாா்க்க வேண்டும். இல்லையெனில் அபாயகரமான நிலை ஏற்படும் என்பதால், பொதுமக்களின் நலன்கருதி வீடு வீடாகச் சென்று ஆக்சிஜன் அளவு, சளி, காய்ச்சல் உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெயச்சந்திரபானு ரெட்டி, 333 கிராம ஊராட்சிகளுக்கு காணொலி மூலம் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, ஊத்தங்கரையை அடுத்த வீராட்சிகுப்பம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சுகாதாரத் துறை, அங்கன்வாடி பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com