கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை காலை முதல் மேக மூட்டமாக காணப்பட்ட நிலையில், மதியம் மழை பெய்தது. சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால், சாலையோர பள்ளங்களில் மழை நீா் தேங்கியது. கழிவு நீா் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்பால், மழைநீருடன் கழிவு நீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடின.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பூவத்தி, ராயக்கோட்டை, ஒசூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்துள்ளது. இந்த மழையால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். மாலையில் குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணியளவில் பெய்த மழை அளவு (மி.மீ.): தளி-40, தேன்கனிக்கோட்டை-29, ஒசூா்-18, ராயக்கோட்டை-6, சூளகிரி-2 மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com