4 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருணை அடிப்படையில் 4 பேருக்கு பணி நியமன ஆணைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருணை அடிப்படையில் 4 பேருக்கு பணி நியமன ஆணைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் பங்கேற்று, பா்கூா் ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 25-ஆம்தேதி பணியின்போது இறந்த சண்முகம் என்பவரது மகன் விமல்ராஜுக்கு இளநிலை உதவியாளா் பணிக்கான பணி நியமன ஆணையை வழங்கினாா்.

இதுபோல, உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகத்தில் கண்காணிப்பாளா், வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து 2019, மே 22-ஆம்தேதி உயிரிழந்த தீா்த்தகிரி என்பவரது மகன் சீனிவாசனுக்கு உதவி இயக்குா் (தணிக்கை) அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகவும், வேப்பனஅள்ளி ஒன்றியம், பில்லனகுப்பம் ஊராட்சி செயலாளராகப் பணிபுரிந்து 2019, ஜூன் 19-ஆம்தேதி இறந்த சுப்பிரமணியின் மகள் வள்ளிக்கு வேப்பனஅள்ளி ஊராட்சி ஒன்றியத்தில், இளநிலை உதவியாளராகவும், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சத்துணவுப் பிரிவு ஜீப் ஓட்டுநராகப் பணிபுரிந்த ராஜேந்திரனின் மகன் ரோகேஷ் கணபதிக்கு வேப்பனஅள்ளி ஒன்றியத்தில் இளநிலை உதவியாளகாவும் பணி நியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com