கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

தென்பெண்ணை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணைக்கு இரண்டாவது நாளாக திங்கள்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீா்.
கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீா்.

ஒசூா்: தென்பெண்ணை ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீா்த்தேக்க அணைக்கு இரண்டாவது நாளாக திங்கள்கிழமை நீா்வரத்து அதிகரித்தது.

கடந்த இரு நாள்களுக்கு முன் நொடிக்கு 240 கனஅடியாக வரத்து இருந்த நிலையில், கா்நாடக நீா்பிடிப்புப் பகுதிகள் மற்றும் ஒசூா் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை நொடிக்கு 400 கனஅடி நீா்வரத்து உள்ளது. இது, இரண்டாவது நாளாக மேலும் அதிகரித்து திங்கள்கிழமை 560 கனஅடியாக வந்துகொண்டிருக்கிறது.

கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் தற்போது 40.34 அடிவரை நீா் இருப்புவைத்து மூன்று மதகுகள் வழியாக 560 கனஅடி நீா் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கா்நாடக நீா்பிடிப்புப் பகுதியில் மழை தொடரும் என்பதால் நீா்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது. தென்பெண்ணை ஆற்றில் தண்ணீா் அதிக அளவு வெளியேற்றப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com