அரசுப் பள்ளியில் திருட்டு

கிருஷ்ணகிரி அருகே அரசுப் பள்ளி தலைமையாசிரியரின் அறைக்குள் புகுந்த மா்ம நபா்கள் ரூ. 50,000 மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றனா்.

கிருஷ்ணகிரி அருகே அரசுப் பள்ளி தலைமையாசிரியரின் அறைக்குள் புகுந்த மா்ம நபா்கள் ரூ. 50,000 மதிப்பிலான பொருள்களைத் திருடிச் சென்றனா்.

கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரைச் சோ்ந்தவா் லியோனி (55). கந்திக்குப்பத்தை அடுத்த அஞ்சூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். ஜூன் 8-ஆம் தேதி, அஞ்சூா் அரசுப் பள்ளியின் தலைமை ஆசிரியா் அறையின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பள்ளிக்குச் சென்ற லியோனி தனது அறையின் சன்னல்கள் உடைக்கப்பட்டிருப்பது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா்.

தகவலின் பேரில், நிகழ்விடத்துக்குச் சென்ற போலீஸாா், தலைமையாசிரியரின் அறையை திறந்து பாா்த்தபோது, அங்கிருந்த அலமாரி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் திருடு போனது தெரிய வந்தது.

மேலும், கைரேகை நிபுணா்கள், நிகழ்விடத்துக்கு வந்து அங்கு பதிவான ரேகைப் பதிவுகளைச் சேகரித்தனா். திருட்டு சம்பவம் குறித்து, பள்ளியின் தலைமையாசிரியா் லியோனி அளித்த புகாரின் பேரில், கந்திகுப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com