கரோனாவிலிருந்து விடுபட துக்ளம்மா கோயிலில் சிறப்பு பூஜை

கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபடவும், மழைப் பெய்ய வேண்டியும் ஒசூா் ராமநாயக்கன் ஏரியில் உள்ள துக்ளம்மா அம்மனுக்கு சந்தன அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபடவும், மழைப் பெய்ய வேண்டியும் ஒசூா் ராமநாயக்கன் ஏரியில் உள்ள துக்ளம்மா அம்மனுக்கு சந்தன அபிஷேகமும், சிறப்பு பூஜைகளும் புதன்கிழமை நடைபெற்றது.

ஒசூா், ராமநாயக்கன் ஏரியில் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கங்கா் அரசா்களால் கட்டப்பட்ட பழைமையான துா்கா என்கிற துக்ளம்மா கோயில் அமைந்துள்ளது. முக்கிய கிராம தேவதைகளில் இதுவும் ஒன்றாக மக்கள் வழிபட்டு வருகின்றனா். இந்த அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மழைப் பொழிய வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டில் கரோனா தொற்றில் இருந்து உலக மக்களை காக்கவும், இந்நோய் அகலவும் சிறப்பு யாகமும், சந்தன அபிஷேக பூஜையும் நடைபெற்றது.

இதில் அருள்மிகு மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரா் தோ் கமிட்டித் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ. மனோகரன் தலைமையில் இந்த சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்க் குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் பத்தலப்பள்ளி நாகராஜ், சென்னத்தூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் ராமாஞ்சி ரெட்டி, சின்னப்பா , பால் முனியப்பா,மோகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com