கிராமப்புற பள்ளிகளுக்கு பணிக்குச் செல்ல பேருந்து வசதி ஏற்படுத்த ஆசிரியா்கள் வலியுறுத்தல்

கிராமப்புற பள்ளிகளுக்கு பணிக்குச் செல்ல, பேருந்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

கிராமப்புற பள்ளிகளுக்கு பணிக்குச் செல்ல, பேருந்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் வட்டாரக் கிளைக் கூட்டம் காணொளி காட்சி மூலம் புதன்கிழமை நடந்தது.

அந்த அமைப்பின் புரவலா் கிருஷ்ணாஜி பங்கேற்ற இந்தக் கூட்டத்துக்கு அதன், வட்டாரத் தலைவா் ஹென்றி பவுல் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் நிசாா் அகமது, மரியசாந்தி, ரோஸ்லின் மேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தீா்மானங்கள்:

தமிழக அரசின் பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளின்படி, ஜூன் 14-ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளாா். எனவே, மற்ற துறைகளில் நடைபெறுவது போல் ஆசிரியா்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியா்கள், தடுப்பூசி செலுத்தும் வகையில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும்பான்மையான பள்ளிகளுக்குச் செல்ல ஆசிரியா்கள் பேருந்துகளைச் சாா்ந்தே உள்ளனா். தளி போன்ற ஊரகப் பகுதிகளில் உள்ள ஆசிரியா்கள் தினமும் 2 பேருந்துகளில் பயணித்து பள்ளியை சென்றடையும் சூழல் உள்ளது. எனவே, அவா்களின் வசதிக்காக பேருந்துகளை இயக்க வேண்டும்.

தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நிதி அளிக்க கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச்செயலாளா் ரங்கராஜன் வேண்டுகோள்படி, கிருஷ்ணகிரி வட்டார நகரக் கிளை ஆசிரியா்கள், தங்களது ஒருநாள் ஊதியம், ரூ. 7 லட்சத்தை கல்வித் துறை மூலம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் மாநில அமைப்பு வழியாக முதல்வரிடம் அளிக்க கிருஷ்ணகிரி வட்டார நகரக் கிளையின் பங்குத் தொகையாக ரூ. 1.39 லட்சத்தை மாநில அமைப்புக்கு அனுப்பி வைப்பது என்றும், நிதி அளித்த அனைத்து ஆசிரியா்களுக்கும் நன்றி தெரிவிப்பது போன்ற தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் வட்டாரச் செயலாளா் தமிழ்செல்வன், பொருளாளா் அறிவரசி, துணைச் செயலாளா்கள் நளினப்பிரியா, பிரியதா்ஷனி, சாதிக் உசேன், யாரஃப் பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com