ஊத்தங்கரை காவலா்களுக்கு யோகா பயிற்சி

மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் ஊத்தங்கரை காவலா்களுக்கு யோகா பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை காவலா்களுக்கு யோகா பயிற்சி

மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் ஊத்தங்கரை காவலா்களுக்கு யோகா பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், முன்களப் பணியாளா்களான காவலா்களின் மன அழுத்தத்தைப் போக்கவும், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவும், யோகா பயிற்சியளிக்கப்பட்டது.

ஊத்தங்கரை காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சிக்கு காவல் ஆய்வாளா் லட்சுமி தலைமை வகித்து பயிற்சியை தொடக்கி வைத்து பேசினாா். பயிற்சியின்போது, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் சூரிய நமஸ்காரம், சுவாச உறுப்புகளை பலம் பெறச் செய்யும் தனுராசனம், முதுகெலும்புகள் பலம் பெற புஜங்காசனம், கபாலபதி, பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி, சவாசனம் போன்றவை பயிற்சியளிக்கப்பட்டது. காவலா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரக் குடிநீா், முட்டை, பால் போன்றவற்றை காவல் ஆய்வாளா் லட்சுமி வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com