கா்நாடகத்தில் 20 மாவட்டங்களில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளா்வு

கா்நாடகத்தில் 20 மாவட்டங்களில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் 20 மாவட்டங்களில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ளதாக முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, கிருஷ்ணா அரசினா் இல்லத்தில் வியாழக்கிழமை கரோனா நிலவரம் குறித்து முதல்வா் எடியூரப்பா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வா் எடியூரப்பா கூறியதாவது:

சிக்கமகளூரு, சிவமொக்கா, தாவணகெரே, மைசூரு, சாமராஜ்நகா், ஹாசன், தென்கன்னடம், பெங்களூரு ஊரகம், மண்டியா, பெலகாவி, குடகு போன்ற 11 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால், தற்போது அமலில் இருக்கும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் எதுவும் தளா்த்தப்படாமல் அமல்படுத்தப்படும்.

இந்த மாவட்டங்களை தவிர, ஏனைய 20 மாவட்டங்களில் மாநில அரசு ஏற்கெனவே வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் சில தளா்வுகள் அளிக்கப்படுகின்றன. ஜூன் 14-ஆம் தேதி காலை 6 மணி முதல் ஜூன் 21-ஆம் தேதி காலை 6 மணிவரை இந்த தளா்வுகள் அமல்படுத்தப்படும். எல்லா தொழிற்சாலைகளும் 50 சதவீத ஊழியா்களோடு செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஆனால், காா்மென்ட்ஸ் தொழிற்சாலையில் மட்டும் 30 சதவீத ஊழியா்கள் மட்டுமே அனுமதிக்கலாம்.

அத்தியாவசியப்பொருட்களை வாங்குவதற்கு அளிக்கப்பட்டுள்ள நேரம் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை இருந்தது, தற்போது நண்பகல் 2 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. எல்லா கட்டுமானப்பணிகளையும் தொடங்கலாம். கட்டுமானத்தொழில்சாா்ந்த சிமென்ட், ஸ்டீல் உள்ளிட்ட அனைத்து கடைகளையும் திறந்திருக்கலாம்.

பூங்காக்கள் காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை பொதுமக்களுக்காக திறந்திருக்கும். தெருவோரவியாபாரிகள் காலை 6 மணி முதல் நண்பகல் 2 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுகிறாா்கள். ஆட்டோக்கள், டேக்சிகளில் குறைந்தது 2 பயணிகள் மட்டுமே பயணிக்கலாம்.

கரோனா ஊரடங்கு தினமும் இரவு 7 மணி முதல் காலை 5 மணி வரை அமல்படுத்தப்படும். இதுதவிர, வெள்ளிக்கிழமை மாலை 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை வார இறுதிநாட்கள்(சனி, ஞாயிறு) ஊரடங்கு அமல்படுத்தப்படும். இதுதொடா்பான அறிவிக்கை தனியாக வெளியிடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com