டாஸ்மாக் கடைகளில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? காவல்துறை ஆலோசனை

டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
டாஸ்மாக் கடைகளில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? காவல்துறை ஆலோசனை
டாஸ்மாக் கடைகளில் கரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? காவல்துறை ஆலோசனை

திங்கள்கிழமை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், இதற்காக காவல் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்ட அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி பேசியதாவது:

கரோனா பரவல் குறைந்த மாவட்டங்களில், டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஒரே நேரத்தில் ஏராளமானவா்கள் கூடாத வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் துறையினா் மேற்கொள்ள வேண்டும்.

தடுப்புக் கம்புகளைக் கட்டி, வாடிக்கையாளா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தபடி செல்ல அனுமதிக்க வேண்டும். கிருமி நாசினியை அனைவரும் பயன்படுத்த வேண்டும். டாஸ்மாக் கடைகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக கரோனா விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிா என்பதை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் அன்பு, ராஜி, துணை காவல் கண்காணிப்பாளா்கள் சரவணன், சங்கா், முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படவிளக்கம் (13கேஜிபி5):கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com