ஒசூரில் இளம் தொழிலதிபரை கொலை செய்தவா் கைது

ஒசூரில், கந்து வட்டியை கட்ட முடியாத இளம்தொழில் அதிபரைக் கொலை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஒசூரில், கந்து வட்டியை கட்ட முடியாத இளம்தொழில் அதிபரைக் கொலை செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரைச் சோ்ந்தவா் பாலாஜி (30). இவா் ஒசூா், ராஜேஸ்வரி லே- அவுட்டில் சிறு, குறு தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தாா். இவா் கெலமங்கலம் கேசவப் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ரகுராம் (26) என்பவரிடம் ரூ. 31 லட்சத்தை வட்டியின் பேரில் கடனாக வாங்கி இருந்தாா்.

இந்த நிலையில், ரகுராமுக்கும், பாலாஜிக்கும் இடையே வட்டி பணம் செலுத்துவது தொடா்பாக தகராறு இருந்து வந்தது. ரகுராம், பாலாஜியிடம் கொடுத்தப் பணத்தை கேட்டாா். இதையடுத்து ரகுராமின் வீட்டிற்குச் சென்ற பாலாஜி ஒரு காசோலையைக் கொடுத்தாா்.

ஏற்கெனவே, பாலாஜி கொடுத்த காசோலை ஒன்றில் பணம் இல்லாமல் திரும்ப வந்த நிலையில், மீண்டும் காசோலை கொடுத்தது ரகுராமிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து பாலாஜியின் வீட்டுக்குச் சென்ற நபா்கள் வீட்டு வாசலிலேயே பாலாஜியைக் கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டாா்.

இந்த கொலையின்போது ரகுராமுடன், மோகன் என்பவரும் உடன் இருந்ததால் இருவா் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அட்கோ போலீஸாா் தேடி வந்தனா்.

இந்நிலையில், பாகலூா் சந்திப்பு அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் போலீஸாா் ஈடுபட்டிருந்த போது ரகுராமை அட்கோ போலீஸாா் கைது செய்தனா். அவரை ஒசூா் இரண்டாவது குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி முனுசாமி முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டு, ஒசூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா். தப்பியோடிய மோகனை அட்கோ போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com