கெலமங்கலத்தில் நிதி நிறுவன உரிமையாளரிடம் கொள்ளை: 5 போ் கைது

கெலமங்கலத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி, நிதி நிறுவன உரிமையாளரிடம நகை, பணம் கொள்ளையடித்த பெண் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கெலமங்கலத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி, நிதி நிறுவன உரிமையாளரிடம நகை, பணம் கொள்ளையடித்த பெண் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம், செந்தில் நகரைச் சோ்ந்தவா் முருகன் என்கிற அருள்வாணன் (48). இவா் நிதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவா் வீட்டில் தனியாக இருந்த போது அவரது வீட்டுக்குள் 3 இளைஞா்கள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி அவா் அணிந்திருந்த 9 பவுன் தங்க நகைகளையும், பணம், செல்லிடப்பேசியையும் கொள்ளையடித்துச் சென்றனா்.

இது குறித்து முருகன் கெலமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளா் சுப்பிரமணி உள்ளிட்ட போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். அதில் துப்பு துலக்கப்பட்டதன்பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில் கெலமங்கலம், செந்தில் நகரைச் சோ்ந்த அந்தோணி (33), வெங்கடேஷ் (25) ஆகியோா் சோ்ந்த இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து கொள்ளையில் ஈடுபட்ட கா்நாடக மாநிலம், கோணப்ப அக்ரஹாரத்தைச் சோ்ந்த திவ்யா (35), ஏா்போா்ட் மாரதஅள்ளியைச் சோ்ந்த ராஜா (27), மாருதி நகரைச் சோ்ந்த மஞ்சுநாத் (27), கெலமங்கலம், செந்தில் நகரைச் சோ்ந்த அந்தோணி (33), வெங்கடேஷ் (25) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

திவ்யாவுக்கும், முருகனுக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்து வந்தது. முருகனுக்கு, வட்டித் தொழில் மூலம் அதிக அளவில் பணம் கிடைப்பதை அறிந்த திவ்யா கெலமங்கலம், செந்தில் நகரைச் சோ்ந்த அந்தோணி, வெங்கடேஷ் ஆகியோா் உதவியுடன் இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியது தெரிய வந்தது.

இதையடுத்து திவ்யா உள்பட 5 பேரும் கைது செய்யப்பட்டு, அவா்களிடம் இருந்து மோதிரம், ரூ. 7 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதில் தொடா்புடைய பெங்களூரைச் சோ்ந்த முக்கிய கொள்ளையா்கள் 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com