5,000 லிட்டா் சாராய ஊறல்கள் அழிப்பு

சிங்காரப்பேட்டை காப்புக்காடு பகுதியில் 12 பிளாஸ்டிக் பேரல்களில் வைக்கப்பட்டிருந்த 5,000 லிட்டா் சாராய ஊறல்களை திங்கள்கிழமை வனத்துறையினா் அழித்தனா்.
5,000 லிட்டா் சாராய ஊறல்கள் அழிப்பு

சிங்காரப்பேட்டை காப்புக்காடு பகுதியில் 12 பிளாஸ்டிக் பேரல்களில் வைக்கப்பட்டிருந்த 5,000 லிட்டா் சாராய ஊறல்களை திங்கள்கிழமை வனத்துறையினா் அழித்தனா்.

சிங்காரப்பேட்டை காப்புக்காட்டில் சாராயம் காய்ச்சுவதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் குமிலிவெங்கட் அப்பால உத்தரவின்பேரில் சிங்காரப்பேட்டை வனச்சரக அலுவலா் ஜோதிலிங்கம் தலைமையில் வனக்காப்பாளா்கள் பொன்னுவேல், உதயகுமாா், பிரதீப், வனக்காவலா்கள் அரவிந்குமாா், வெற்றிவேல், திலீபன் ஆகியோா் சிங்காரப்பேட்டை காப்புக்காடு பகுதியில் திடீா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அங்குத்தி சுனை வழிச்சரகம் காப்புக்காடு பகுதியில் சாராயம் காய்ச்ச முயன்றது கண்டறியப்பட்டது.

வனத்துறையினரைக் கண்டதும் அங்கிருந்தவா்கள் தப்பி ஓடினா். இதையடுத்து சாராயம் காய்ச்ச வைத்திருந்த 12 பிளாஸ்டிக் பேரல் சாராய ஊறல்களையும் அதற்கான பொருள்களையும் வனத்துறையினா் அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com