தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவா் ஆய்வு

தூய்மைப் பணியாளா்களுக்கு செயல்படுத்தப்படும் மறுவாழ்வு திட்டங்கள், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவா் வெங்கடேசன் வெள்ளிக்கிழமை ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு செயல்படுத்தப்படும் மறுவாழ்வு திட்டங்கள், கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவா் வெங்கடேசன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரி நகராட்சி, ராசி வீதியில் தூய்மைப் பணியாளா்கள் குடியிருப்பில் ஆய்வு செய்த அவா், தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசியதாவது:

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகளின் தூய்மைப் பணியாளா்களுக்கான ஊதியம் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருவதையும், நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிா என்பதை உறுதி செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, 3 மாதத்துக்கு ஒருமுறை கட்டாயமாக மருத்துவ முகாம் நடத்திட வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் சொந்த வீடு கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அவா்களது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகள் நன்கு படித்து அரசு அலுவலா்களாக பணியாற்றிட வேண்டும்.

தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகள், சாா்ந்தோா், சுயதொழில் தொடங்கி மத்திய அரசு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 25 லட்சம் வரை கடனுதவி வழங்குகிறது. தூய்மைப் பணியாளா்களின் மீது தனி கவனம் செலுத்தி, அரசின் திட்டங்கள் அனைத்து சென்றடைவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என்றாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஷ், திட்ட இயக்குநா் பெரியசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராஜப, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் கோவிந்தன், ஆணையா்கள் சந்திரா, செந்தில்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com