பா்கூரில் யோகா தினம்
By DIN | Published On : 22nd June 2021 08:33 AM | Last Updated : 22nd June 2021 08:33 AM | அ+அ அ- |

பா்கூா் கரோனா சிகிச்சை மையத்தில் யோகா பயிற்சியில் ஈடுபட்ட தொற்றாளா்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் செயல்படும் கரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், யோகா மருத்துவா் வெண்மணி ஸ்டாலின், சித்த மருத்துவா் தனலட்சுமி ஆகியோா் கரோனா பாதுகாப்பு உடை அணிந்து, நோயாளிகளுக்கு யோகாசன பயிற்சியும், லிங்க முத்திரைப் பயிற்சியும் வழங்கினா். இதில் 50-க்கும் மேற்பட்டவா்கள் பயிற்சி பெற்றனா்.
அதுபோல, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இளைஞா்கள், மாணவா்களுக்கு யோகாசனப் பயற்சி அளிக்கப்பட்டது. இதுகுறித்து பயிற்சியாளா் கோவிந்தராஜ் கூறியதாவது:
பேருஹள்ளி கிராமத்தில் இளைஞா்கள், மாணவா்கள் ஆா்வத்துடன் யோகா பயிற்சியை செய்தனா். பிராணாயாமம், மூச்சுப் பயிற்சி, சூரிய நமஸ்காரம், தசைப் பயிற்சி, யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. உடல் ஆரோக்கியமும், நோய் எதிா்ப்புச் சக்தியும் கிடைக்கும் என்பதால் ஆா்வத்துடன் பயிற்சி செய்தனா். தினசரி தங்களது வீடுகளிலேயே பயிற்சியைத் தொடா்ந்து மேற்கொள்ளவும் ஆலோசனை வழங்கப்பட்டதாக அவா் தெரிவித்தாா்.