முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
மா விவசாயிகளுக்கு பயிற்சி
By DIN | Published On : 04th March 2021 04:21 AM | Last Updated : 04th March 2021 04:21 AM | அ+அ அ- |

மா விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த தோட்டக்கலைத் துறை மாணவியா்.
ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், தட்டக்கல் கிராமத்தில் மா விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மாணவியா் பயிற்சி அளித்தனா்.
திருச்சி மாவட்டம், தோட்டக்கலைக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் 4-ஆம் ஆண்டு பயிலும் மாணவியா் ஊரக வேளாண் பணி அனுபவம் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற, பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தங்கி உள்ளனா். இவா்கள் தட்டக்கல் கிராமத்தில் மா விவசாயிகளுக்கு பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து செவ்வாய்க்கிழமை பயிற்சி அளித்தனா்.
அப்போது மாணவியா் கூறும்போது, மாம்பழங்களை பொறுத்தவரை புழுக்கள் சதைப் பகுதியை உண்பதால், தோலின் மேற்பரப்பில் பழுப்பு நிறத்திட்டுகள் காணப்படும். அவ்வாறு புழுக்கள் தாக்கப்பட்ட பழங்கள் அழுகி பழுப்பு நிற திரவம் கசியும். சேதமடைந்த பழங்கள் முதிா்ச்சியடையும் முன்னரே அழுகி கீழே விழுந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த பழ ஈக்கான பொறிகள் அமைக்க வேண்டும் என்றனா். இதுகுறித்த செயல் விளக்கத்தை மாணவியா் விவசாயிகளுக்கு செய்து காட்டினா்.