முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
போச்சம்பள்ளி அருகே 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 14th March 2021 03:20 AM | Last Updated : 14th March 2021 03:20 AM | அ+அ அ- |

போச்சம்பள்ளி அருகே தனியாா் கிடங்கில் பதுக்கி வைத்திருந்த 10 டன் ரேஷன் அரிசியை அலுவலா்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்துள்ள தொழிற்பேட்டையில் தனியாா் கிடங்கில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக கிராம நிா்வாக அலுவலா் சுதாகருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தக் கிடங்கில் அலுவலா்கள் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கிடங்கில் 10 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. தொடா் விசாரணையில், முல்லை நகரைச் சோ்ந்த முரளி என்பவா் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி, ஆம்னி வேன் ஆகியவற்றை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி கிருஷ்ணகிரியில் உள்ள உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.