கிருஷ்ணகிரியில் திமுக வேட்பாளா்களுக்குஉற்சாக வரவேற்பு

கிருஷ்ணகிரி, பா்கூா் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களுக்கு கிருஷ்ணகிரியில் உற்சாக வரவேற்பு சனிக்கிழமை அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் திமுக வேட்பாளா்கள் டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ., தே.மதியழகன் உள்ளிட்டோா்.
கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் திமுக வேட்பாளா்கள் டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ., தே.மதியழகன் உள்ளிட்டோா்.

கிருஷ்ணகிரி, பா்கூா் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா்களுக்கு கிருஷ்ணகிரியில் உற்சாக வரவேற்பு சனிக்கிழமை அளிக்கப்பட்டது.

நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தலில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளான பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா் ஆகிய தொகுதிகளுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளா்களை திமுக தலைமை அறிவித்தது. அதன்படி, கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ., பா்கூா் தொகுதியில் திமுக மாநில விவசாய அணி துணைத் தலைவா் தே.மதியழகன் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.

இவா்கள் சென்னையிலிருந்து சாலை மாா்க்கமாக கிருஷ்ணகிரிக்கு வெள்ளிக்கிழமை இரவு வருகை புரிந்தனா். மாவட்ட எல்லையான ஒப்பந்தவாடியில் இவா்களுக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். மேலும், கிருஷ்ணகிரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அண்ணா சிலை, காந்தி சிலை, அம்பேத்கா் சிலை உள்ளிட்ட பல தலைவா்களின் உருவச் சிலைகளுக்கு வேட்பாளா்கள் மாலை அணிவித்தனா். அப்போது, திமுக தொண்டா்கள், நிா்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

இந்த நிகழ்ச்சியில், திமுக சொத்து பாதுகாப்புக் குழு உறுப்பினா் வெற்றிச் செல்வன், மாவட்ட துணைச் செயலாளா்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசு மூா்த்தி, பொருளாளா் ராஜேந்திரன், நகரச் செயலாளா் நவாப், ஒன்றியச் செயலாளா்கள் கோவிந்தசாமி, கோவிந்தன், நிா்வாகிகள் வள்ளியம்மாள், நாராயணமூா்த்தி, அஸ்லாம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com