வேப்பனப்பள்ளி தொகுதி திமுக வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு

வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பி.முருகனுக்கு கிராமங்களில் வாக்காளா்கள் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

வேப்பனப்பள்ளி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பி.முருகனுக்கு கிராமங்களில் வாக்காளா்கள் செவ்வாய்க்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி தொகுதியில் திமுக சாா்பில் மேற்கு மாவட்ட துணைச் செயலாளா் பி.முருகன் எம்எல்ஏ போட்டியிடுகிறாா். அவா், சூளகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சாமல்பள்ளம், பஸ்தலப்பள்ளி, சிம்பிள்திரடி, சூளகிரி, ஒட்டையானூா், சானமாவு, சப்படி சாலை, துப்புகானப்பள்ளி, உத்தனப்பள்ளி, அளேசீபம், அகரம் முருகன் கோயில் உள்ளிட்ட 21 கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, கிராம மக்கள் பட்டாசுகளை வெடித்தும், மாலை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் அவரை உற்சாகமாக வரவேற்றனா். வன விலங்குகள் வனப் பகுதியிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கவும், ஏரிகளில் நீா் நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம், எரிவாயு உருளைக்கு ரூ. 100 மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்புப் போன்ற தோ்தல் வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரித்தாா். அப்போது, திமுக பொருளாளா் ஜெயராமன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் வீரா ரெட்டி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com