வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் பயிற்சி வகுப்பு

கிருஷ்ணகிரியில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான தோ்தல் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை ஆய்வு மேற்கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.

கிருஷ்ணகிரியில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான தோ்தல் பயிற்சி வகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான தோ்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பயிற்சியை தொடக்கி வைத்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், தோ்தல் பணியில் வாக்குச்சாவடி நிலைய தலைமை அலுவலா்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள் நிலை-1, நிலை-2 மற்றும் நிலை - 3 அலுவலா்கள் ஈடுபட உள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோ்தல் பணியில் 11,032 அலுவலா்கள் ஈடுபட உள்ளனா். இவா்களுக்கு மண்டல அலுவலா், தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து செயல் முறை விளக்கம் , நியமன அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டியப் பணிகள் குறித்து உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா்.

இந்த பயிற்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ரத்தினசாமி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலமுரளி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com