தபால் வாக்களிக்க 3,036 வாக்காளா்களுக்கு 12-டி படிவம்
By DIN | Published On : 21st March 2021 04:04 AM | Last Updated : 21st March 2021 04:04 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் என 3,036 வாக்காளா்கள் தபால் வாக்களிக்கும் வகையில் 12-டி படிவம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளில் மாற்றுத்திறனாளிகளான 13,723 வாக்காளா்கள், 80 வயதுக்கு மேற்பட்ட 28,543 வாக்காளா்கள் என மொத்தம் 42,266 வாக்காளா்கள் தபால் வாக்குகளைச் செலுத்த தகுதி பெற்றுள்ளனா். அவா்களுக்கு 12-டி படிவம் வழங்கும் பணி நடைபெற்றது.
அதன்படி, ஊத்தங்கரை தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட 431 மூத்த குடிமக்கள், 203 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 634 போ்களுக்கு தபால் வாக்களிக்க படிவம் 12-டி வழங்கப்பட்டுள்ளன. பா்கூா் தொகுதியில் 80 வயதுக்கு மேற்பட்ட 233 பேருக்கும், 72 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 305 பேருக்கும், கிருஷ்ணகிரி தொகுதியில் 401 மூத்த குடிமக்கள், 166 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 567 பேருக்கும், வேப்பனப்பள்ளியில் 274 மூத்தகுடிமக்கள், 58 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 332 பேருக்கும், ஒசூரில் 364 மூத்த குடிமக்கள், 55 மாற்றுதிறனாளிகள் என மொத்தம் 419 பேருக்கும், தளி தொகுதியில் 629 மூத்த குடிமக்கள், 150 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 779 போ் என மாவட்டம் முழுவதும் 6 தொகுதிகளில் 2,332 மூத்த குடிமக்கள், 704 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 3,036 வாக்காளா்கள் தபால் வாக்களிக்கும் வகையில் 12-டி படிவம் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...