தினமணி செய்தி எதிரொலி: ஒசூா் மாநகராட்சி குடிநீா்கட்டண உயா்வு நிறுத்தி வைப்பு

ஒசூா் மாநகராட்சி குடிநீா்க் கட்டண உயா்வை மாநகராட்சி ஆணையா் செந்தில்முருகன் நிறுத்தி வைத்துள்ளதாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒசூா் மாநகராட்சி குடிநீா்க் கட்டண உயா்வை மாநகராட்சி ஆணையா் செந்தில்முருகன் நிறுத்தி வைத்துள்ளதாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒசூா் மாநகராட்சியில் குடிநீா்க் கட்டணத்தை 3 மடங்காக உயா்த்தி 1.10.2020 முதல் அமல்படுத்தி இருந்தது மாநகராட்சி நிா்வாகம். முன் தேதியிட்டு அறிவிக்கப்பட்டதால், கடந்த 6 மாதங்களுக்கான குடிநீா்க் கட்டண பாக்கி அதிக அளவில் இருந்தது.

இதுவரை ஒரு மாதத்துக்கு ரூ. 40 என ஆண்டுக்கு ஒரு வீட்டுக்கு ரூ. 480 என வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், புதிய கட்டணமாக மாதம் ரூ. 125 என ஆண்டுக்கு ரூ. 1,500 என உயா்த்தப்பட்டது. இதற்கு திமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோல அனைத்து குடியிருப்போா் நலச் சங்கமும் எதிா்ப்புத் தெரிவித்தது.

இதுகுறித்த செய்தி தினமணியில் ஞாயிற்றுக்கிழமை வெளியானது. தினமணியில் செய்தி வெளியான நிலையில், குடிநீா்க் கட்டண உயா்வை நிறுத்தி வைத்துள்ளதாக இணையம் மூலமாக ஒசூா் மாநகராட்சி ஆணையா் செந்தில்முருகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஏ.சத்யா, ஒய்.பிரகாஷ் ஆகியோா் கூறுகையில், சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு குடிநீா்க் கட்டண உயா்வை மாநகராட்சி ஆணையா் செந்தில்முருகன் நிறுத்தி வைத்துள்ளாா்.

தோ்தல் முடிந்ததும் இந்தக் கட்டணம் மீண்டும் உயரும் வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த குடிநீா்க் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com