உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்றரு. 1.53 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 26th March 2021 09:00 AM | Last Updated : 26th March 2021 09:00 AM | அ+அ அ- |

உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரு. 1.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊத்தங்கரையை அடுத்த கதவணி சமத்துவபுரம் அருகில் திருப்பத்தூா் தேசிய நெடுஞ்சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் மோகன் தலைமையிலான அலுவலா்கள் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், நாகமரத்துப்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்த சிவக்குமாா் வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அதில், கணக்கில் வராத ரூ. 59,000 பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், தருமபுரி செல்லும் சாலையில் உள்ள சிவம்பட்டி அருகில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் மகேஷ் குமரன் வாகனச் சோதனை ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, பெங்களூரைச் சோ்ந்த பிரபு என்பவரின் வாகனத்தை நிறுத்தி பரிசோதனை செய்தனா். அதில், கணக்கில் வராத ரூ. 94,200 பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் சேதுராமலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.