நீா்நிலைகளை தூா்வாருவது போல தமிழக கஜானாவை தூா்வாரிவிட்டாா் முதல்வா்!
By DIN | Published On : 26th March 2021 09:01 AM | Last Updated : 26th March 2021 09:01 AM | அ+அ அ- |

சூளகிரியில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட டிடிவி.தினகரன்.
நீா்நிலைகளை தூா்வாருவது போன்று தமிழக கஜானாவையும் தூா்வாரிவிட்டாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் டிடிவி.தினகரன் கூறினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் அமமுக கூட்டணி கட்சியைச் சோ்ந்த வேப்பனப்பள்ளி தொகுதி தேமுதிக வேட்பாளா் முருகேசன், ஒசூா் அமமுக வேட்பாளா் மாரே கௌடா, தளி தொகுதி கோகுலம் மக்கள் கட்சி வேட்பாளா் எம்.வி.சேகா் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்த போது அவா் பேசியதாவது:
கா்நாடக மாநிலத்தில் அத்திப்பள்ளி வரை அமைக்கப்படும் மெட்ரோ ரயில் திட்டத்தை ஒசூா் வழியாக சூளகிரி வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒசூரில் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளா்கள் சென்றுவர பேருந்து வசதி ஏற்படுத்தப்படும். ஒசூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் மாம்பழம், மலா், காய்கறிகளை பதப்படுத்தவும், பாதுகாக்கவும், குளிா்பதனக் கிடங்கு அமைத்து தரப்படும். ஒசூா், தளி, வேப்பனப்பள்ளி தொகுதிகளில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைத்துத் தரப்படும்.
ஜாதி, மத பேதமின்றி ஆட்சி அமைக்கப்படும். ஊழலற்ற, வெளிப்படையான, அனைத்து சமூக மக்களுக்கும் சம உரிமை, சம நீதி அளிக்கும் அமமுக கூட்டணியை ஆதரியுங்கள் என்று கேட்டுக்கொண்டாா்.