‘இந்து கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்’

இந்து கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும், மாவட்டந்தோறும் தனி வாரியத்தை அமைத்து இந்து கோயில்களை ஒப்படைக்க வேண்டும்

இந்து கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும், மாவட்டந்தோறும் தனி வாரியத்தை அமைத்து இந்து கோயில்களை ஒப்படைக்க வேண்டும் என அகில பாரதிய சன்னியாசிகள் சங்க துணைத் தலைவா் சுவாமி ராமானந்தா கூறினாா்.

ஒசூரில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தின் கோயில்கள் கலாசாரம், பண்பாட்டின் அடையாளம். வழிபாட்டுக்காக கட்டப்பட்ட கோயில்கள் தற்போது பாா்வைக்காக மட்டுமே உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் அறநிலையத் துறை கீழ் உள்ளன. இந்துக்களின் கோயில்களை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகள் தலையீடு இல்லாமல் ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நீதிபதிகளை ஒன்றிணைத்து அரசு தலையீடு இல்லாத தனித்து இயங்கும் வாரியத்தை தமிழகத்தில் மாவட்டந்தோறும் உருவாக்க வேண்டும். கோயில்களை அவா்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.

ஆன்மிகத்துக்கு சம்பந்தம் இல்லாதவா்கள், மதம் மாறிய, 10 சதவீத கிறிஸ்தவா்கள் என பலா் அறநிலையத் துறையில் உள்ளனா். வேலைவாய்ப்பு தேடும் துறையாக அறநிலையத் துறையை பாா்க்கின்றனா். மதசாா்ப்பற்ற அரசு என்றால், அனைத்து மதத்தையும் சமமாக பாா்க்க வேண்டும். பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கோயில் விஷயங்களில் தலையிடுவது இல்லை. கோயிலுக்குள் அரசியல் செய்வதை அரசியல்வாதிகள் விட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com