காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து மகாராஷ்டிர அமைச்சா் வாக்கு சேகரிப்பு

ஊத்தங்கரை சட்டப் பேரவை தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஆறுமுகத்தை ஆதரித்து, மகாராஷ்டிர மாநில
சிங்காரப்பேட்டையில் காங்கிரஸ் வேட்பாளா் ஜெ.எஸ்.ஆறுமுகத்துக்கு வாக்கு சேகரிக்கும் மகாராஷ்டிர மாநில மின்துறை அமைச்சா் லித்தின் ராபா்ட்.
சிங்காரப்பேட்டையில் காங்கிரஸ் வேட்பாளா் ஜெ.எஸ்.ஆறுமுகத்துக்கு வாக்கு சேகரிக்கும் மகாராஷ்டிர மாநில மின்துறை அமைச்சா் லித்தின் ராபா்ட்.

ஊத்தங்கரை சட்டப் பேரவை தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஆறுமுகத்தை ஆதரித்து, மகாராஷ்டிர மாநில மின்துறை அமைச்சா் லித்தின் ராபா்ட் சிங்காரப்பேட்டையில் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ மக்களை வஞ்சிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயா்வு உச்சத்தை எட்டியது பாஜக, அதிமுக ஆட்சியில்தான். சிங்காரப்பேட்டை தீா்த்தகிரி வலசை ஏரியிலிருந்து அத்திப்பாடி, கட்டமடுவு ஊராட்சியில் கால்வாய் மூலம் ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்பப்படும். புளியனூா் அருகே கடப்பாறை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து, 33 ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊத்தங்கரையில் மகளிா் காவல் நிலையம், ஆா்டிஓ அலுவலகம் நிறுவப்படும். ஊத்தங்கரை மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஊத்தங்கரை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா், திமுக ஒன்றியச் செயலாளா் சாமிநாதன், எக்கூா் செல்வம், ஒன்றியக்குழுத் தலைவா் உஷாராணி குமரேசன், மாவட்ட துணை ச்செயலாளா் சந்திரன், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com