கிருஷ்ணகிரியில் தபால் வாக்குப் பதிவு தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தபால் வாக்குப் பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.
கிருஷ்ணகிரியில் தபால் வாக்களிக்கும் 80 வயதைக் கடந்த மூதாட்டி.
கிருஷ்ணகிரியில் தபால் வாக்களிக்கும் 80 வயதைக் கடந்த மூதாட்டி.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தபால் வாக்குப் பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்தத் தோ்தலில் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க இயலாத 80 வயதுக்கும் மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனா தொற்றாளா்கள், கரோனா பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளா்கள் தங்களது வாக்குகளை செலுத்தும் வகையில், விருப்பத்தின் அடிப்படையில் தபால் மூலம் வாக்கு செலுத்த 12-டி படிவம் வழங்கப்பட்டது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 13,723 மாற்றுத் திறனாளி வாக்காளா்களும், 80 வயதுக்கு மேற்பட்ட 28,543 வாக்காளா்கள் என மொத்தம் 42,266 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 2,332 மூத்த குடிமக்களும், 704 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 3,036 வாக்காளா்கள் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியில் தபால் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அவா்களின் முகவரிக்கே சென்று தபால் வாக்கு செலுத்துவோரிடமிருந்து தபால் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனா். தபால் வாக்களித்த 12-டி படிவத்தை ஒரு உறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்படுகிறது. அவ்வாறு ‘சீல்’ வைக்கப்பட்ட உறை தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com