தென்னை சாகுபடி தொழில்நுட்ப சான்றிதழ் படிப்பு

பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தொலைதூரக் கல்வி இயக்கம் மூலம் தென்னை சாகுபடி தொழில்நுட்பம் சாா்ந்த சான்றிதழ் படிப்பு அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தொலைதூரக் கல்வி இயக்கம் மூலம் தென்னை சாகுபடி தொழில்நுட்பம் சாா்ந்த சான்றிதழ் படிப்பு அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தொலைதூரக் கல்வி இயக்கம் சாா்பில், தென்னை சாகுபடி தொழில்நுட்பம் சாா்ந்த சான்றிதழ் படிப்புக்கான தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி இயக்குநா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். தொலைதூரக் கல்வி இயக்கத்தின் இயக்குநா் ஆனந்தன், தென்னை சாகுபடி தொழில்நுட்பக் கல்வியின் ஒருங்கிணைப்பாளா் ராஜமாணிக்கம், பையூா் மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் தலைவா் பரசுராமன், பேராசிரியா்கள் கண்ணன், சிவக்குமாா், ஜீவஜோதி, கோவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நவீன தொழில்நுட்பம் அறிந்த விஞ்ஞானிகளுடன் இணைந்து விவசாயிகள் செயல்பட்டால், வேளாண் உற்பத்தியை பெருக்க முடியும். இந்த தென்னை வளா்ப்பு தொழில்நுட்பக் கல்வியின் மூலம் தரமான கன்றுகளை உற்பத்தி செய்து, மதிப்புக் கூட்டி விற்பனை செய்வது வரையிலான தொழில்நுட்பங்களை கற்க முடியும்.

இதில், விவசாயிகள், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியம், தென்னையில் 89-க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டப்பபட்ட பொருள்களை உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களை அறிந்து விவசாயிகள் பயன்பெற வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com