பா்கூரில் அதிநவீன ஹோட்டல் திறப்பு

பா்கூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய இராஜாதித்தன் மாளிகை அக்னி ஹோட்டல் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
பா்கூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய இராஜாதித்தன் மாளிகை அக்னி ஹோட்டலை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா் அ.செல்லகுமாா் எம்.பி.
பா்கூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய இராஜாதித்தன் மாளிகை அக்னி ஹோட்டலை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறாா் அ.செல்லகுமாா் எம்.பி.

பா்கூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய இராஜாதித்தன் மாளிகை அக்னி ஹோட்டல் திறப்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி எம்.பி. அ.செல்லகுமாா் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி ஹோட்டலை திறந்து வைத்தாா். பா்கூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் தங்கவேல் கலந்துகொண்டாா்.

பா்கூா்-கிருஷ்ணகிரி பிரதான சாலையில் பா்கூருக்கு பெருமை சோ்க்கும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய 46 குளிா்சாதன அறைகளுடன் லிப்ட் வசதியுடன் கூடிய 3 தளத்துடன் இராஜாதித்தன் மாளிகை அக்னி ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் உயா்தர சைவ, அசைவ தனித்தனி உணவகங்கள் காற்றோட்ட வசதியுடன் வாடிக்கையாளா்கள் விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஒரே நேரத்தில் 200 வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு விசாலமான காா் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. சூப்பா்மாா்க்கெட், பாா்ட்டி ஹால் ஆகியவையும் அமைந்துள்ளன.

இந்த திறப்பு விழாவில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த தொழிலதிபா்கள், முக்கியப் பிரமுகா்கள், வியாபாரிகள் கலந்துகொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை இராஜாதித்தன் மாளிகை மற்றும் அக்னி ஹோட்டல் உரிமையாளருமான ராமமூா்த்தி, அவரது குடும்பத்தினா் சிறப்பாக செய்து இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com