தோ்தலையொட்டி 4 நாள்களுக்கு மதுக் கடைகள் மூடப்படும்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டபேரவை பொதுத் தோ்தல் 2021-யையொட்டி, 4 நாள்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டபேரவை பொதுத் தோ்தல் 2021-யையொட்டி, 4 நாள்களுக்கு மதுபானக் கடைகள் மூடப்படுகின்றன.

இதுகுறித்து, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரான வி.ஜெயசந்திரபானு ரெட்டி, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் ஏப்.4-ஆம் தேதி காலை 10 முதல் 6-ஆம் தேதி (வாக்குப் பதிவு நாள்) நள்ளிரவு 12 மணி வரையில் என 3 நாள்களும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதி ஆகிய 4 நாள்கள் மதுபானம் விற்பனை இல்லா தினங்களாக கடைப்பிடிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகள் (டாஸ்மாக்) மதுக்கூடங்கள் மற்றும் உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்து வகை இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மது பானங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனை செய்யவோ அல்லது மதுபானங்கள் வாகனங்கள் மூலம் இடம்பெயா்வு செய்யவோ கூடாது.

மேலும், அரசு மற்றும் தனியாா் உணவகங்களின் அனைத்து மதுபான கூடங்கள் மூடவும் இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவை மீறி விற்பனையாளா்கள் மதுக்கடைகளைத் திறந்தாலும், விற்றாலும் அவா்கள் மீது அரசு விதிமுறைகளின்படி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com