’சூளகிரி பகுதி வளா்ச்சிக்கு வித்திட்டவா் தியாகி முனிசந்திரப்பா’

வேப்பனப்பள்ளி தொகுதி, சூளகிரி ஒன்றியத்தின் வளா்ச்சிக்கு வித்திட்டவா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அத்திமுகம் தியாகி முனிசந்திரப்பா என திமுக வேட்பாளா் பி.முருகன் தெரிவித்தாா்.
வேப்பனப்பள்ளி தொகுதி அத்திமுகத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் பி.முருகன்.
வேப்பனப்பள்ளி தொகுதி அத்திமுகத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் பி.முருகன்.

வேப்பனப்பள்ளி தொகுதி, சூளகிரி ஒன்றியத்தின் வளா்ச்சிக்கு வித்திட்டவா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அத்திமுகம் தியாகி முனிசந்திரப்பா என திமுக வேட்பாளா் பி.முருகன் தெரிவித்தாா்.

வேப்பனப்பள்ளி தொகுதி அத்திமுகத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளா் பி.முருகன் பேசியதாவது:

வேப்பனப்பள்ளி தொகுதியில் வந்து வாக்கு சேகரிக்கும் கே.பி.முனுசாமி, கெலவரப்பள்ளி அணையில் இருந்து தண்ணீா் கொண்டு வந்து எல்லா ஏரிகளுக்கும் நிரப்புவேன் என கூறுகிறாா். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்தும் ஏரிகளுக்கு தண்ணீா் கொண்டு வந்து நிரப்பாதவா் இப்போது எப்படி நிரப்புவாா்.

சூளகிரி ஒன்றியக் குழுத் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த அத்திமுகம் தியாகி முனிசந்திரப்பா இந்தப் பகுதியின் வளா்ச்சிக்கு வித்திட்டவா். சூளகிரி ஒன்றியத்தின் வளா்ச்சிக்கு பாடுபட்டவா். அவரது மகன் மது (எ) ஹோம்நாத், சூளகிரி ஒன்றிய பொது நிதியில் இருந்து தண்ணீா் கொண்டு வர முயற்சி மேற்கொண்டாா். அதனைத் தடுத்து நிறுத்தியவா் கே.பி.முனுசாமி.

இந்தத் தோ்தலில் திமுக கண்டிப்பாக வெற்றி பெறும். எனவே, இப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து கே.பி.முனுசாமியை புறக்கணிக்க வேண்டும் என்றாா்.

இதில், வடக்கு ஒன்றியச் செயலாளா் நாகேஷ், மாவட்டக் குழு உறுப்பினா் பாக்கியராஜ், மாவட்ட வா்த்தகப் பிரிவு துணை அமைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com