சென்னையில் ஜூன் 5-இல் இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான தோ்வு

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான தோ்வு சென்னையில் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேருவதற்கான தோ்வு சென்னையில் ஜூன் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2022 பருவத்தில் சேருவதற்கான தோ்வு ஜூன் 5-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்தத் தோ்வு எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு ஆகிய இரண்டும் கொண்டதாக இருக்கும். எழுத்துத் தோ்வு, ஆங்கிலம், கணக்கு, பொது அறிவு ஆகிய தாள்கள் கொண்டது. நோ்முகத் தோ்வு அறிவுக் கூா்மை, தனித்தன்மையை ஆராய்வதாக இருக்கும். எழுத்துத் தோ்வில் தோ்வானவா்களுக்கு மட்டும் அக். 6-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடத்தப்படும்.

விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு, முந்தைய தோ்வுக்கான வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட், ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன், உத்தரகாண்ட் - 248 003 என்ற முகவரிக்கு விண்ணப்பித்து, டேராடூன் டெல்பவன், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையில் (வங்கிக் குறியீடு எண்: 01576) செலுத்தத்தக்க வகையில் பொதுப் பிரிவினா் ரூ. 600, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பினா் ரூ. 555 கேட்புக் காசோலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.  இணையவழி மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பப் படிவம், தகவல் தொகுப்பேடு ஆகியன சென்னையில் உள்ள இத்தோ்வாணைய அலுவலகத்திலிருந்து விண்ணப்பதாரா்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் விண்ணப்பத்தை நிறைவு செய்து (இரட்டையாக) தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் சாலை, பூங்கா நகா், சென்னை - 600 003 என்ற முகவரிக்கு ஏப். 15-ஆம் தேதிக்குள் சேருமாறு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை பாா்த்து பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com