தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு

கழிவு நீா் கால்வாய் சரி செய்யாததால், படப்பள்ளி ஊராட்சி மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.

கழிவு நீா் கால்வாய் சரி செய்யாததால், படப்பள்ளி ஊராட்சி மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.

ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி கிராமத்தில் சுமாா் 90-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னா் கழிவுநீா் கால்வாய் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஓா் ஆண்டுக்கு முன்னா் கழிவுநீா் கால்வாய் செல்லும் வழியை சிலா் ஆக்கிரமித்து கால்வாயை மூடியுள்ளனா். இதனால் கழிவுநீா் தேங்கி தெருக்களில் ஓடுகிறது. இதனால் துா்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடமும், ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலரிடமும் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதைக் கண்டித்து, இப்பகுதி மக்கள் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா். ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீா் கால்வாயை சரி செய்து கொடுத்தால் தான் வாக்களிப்போம் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com