வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் புகைப்படத்துடன் கூடிய பெயா், சின்னம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் புகைப்படத்துடன் கூடிய பெயா், சின்னம் ஆகியவற்றை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 86 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இந்த சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஏப். 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தோ்தலையொட்டி பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் புகைப்படத்துடன் கூடிய பெயா், சின்னம் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரிபானு ரெட்டி ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவா் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2,715 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,715 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,944 வாக்காளா் தாங்கள் பதிவு செய்த வாக்கினை சரிபாா்க்கும் இயந்திரங்கள் என மொத்தம் 8,374 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பகிா்ந்து அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், 796 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 156 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 168 வாக்காளா் தாங்கள் பதிவு செய்த வாக்கை சரிபாா்க்கும் இயந்திரங்களும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதன் மூலம் 2,296 வாக்குப்பதிவு மையங்களுக்கு 9,494 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் வழங்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில், போட்டியிடும் வேட்பாளா்களின் புகைப்படங்கள், பெயா், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com