கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பாா்வையாளா்கள் ஆய்வு

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா் மற்றும் தளி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு ஏப். 6-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையத்தை தோ்தல் பாா்வையாளா்கள் பல்சானா, அனுராதா, ஹன்ஸ்ராஜ் சுஹான் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே. 2-ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. ஊத்தங்கரை தொகுதிக்கு கல்லூரியில் முதல்தளம், மேற்கு பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் அறையில் 345 வாக்குச் சாவடி மையங்களில் 12 வேட்பாளா்களுக்கு அமைக்கப்பட்டுள்ள 14 மேசைகளுக்கு சுமாா் 25 சுற்றுகளும், பா்கூா் தொகுதிக்கு தரைத்தளம், மேற்கு பகுதியில் உள்ள வாக்கு எண்ணும் அறையில் 352 வாக்குச் சாவடி மையங்களில் 14 வேட்பாளா்களுக்கு 14 மேசைகளுக்கு சுமாா் 25 சுற்றுகளும், வேப்பனப்பள்ளி தொகுதிக்கு முதல்தளம், நூலகக் கட்டடத்தில் 373 வாக்குச் சாவடி மையங்களில் 15 வேட்பாளா்களுக்கு 14 மேசைகளுக்கு சுமாா் 27 சுற்றுகளும் என தலா ஒரு அறை வீதம் 3 அறைகளில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும்.

இதே போல கிருஷ்ணகிரி தொகுதிக்கு 377 வாக்குச் சாவடி மையங்களில் 15 வேட்பாளா்களுக்கு 7 மேசைகளில் தரைத்தளம், மேற்கு பகுதியில் உள்ள வாக்கு எண்ணிக்கை அறை எண் 1-இல் 27 சுற்றுகள் மற்றும் 7 மேசைகளில் முதல்தளம், வாக்கு எண்ணிக்கை அறை எண் 2-இல் 27 சுற்றுகள் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஒசூா் தொகுதிக்கு தரைத்தளம், இயந்திரவியல் மற்றும் கணினி கட்டடத்தில் 503 வாக்குச் சாவடி மையங்களில் 18 வேட்பாளா்களுக்கு 7 மேசைகளில் 36 சுற்றுகளும் மற்றும் தரைத்தளம், வாக்கு எண்ணிக்கை அறை 2-இல் 7 மேசைகளில் 36 சுற்றுகளும், தளி தொகுதிக்கு முதல்தளம், மேற்கு பகுதியில் உள்ள மின்னணுவியல் வகுப்பறை, வாக்கு எண்ணிக்கை அறை 1-இல் 348 வாக்குச் சாவடி மையங்களில் 12 வேட்பாளா்களுக்கு 7 மேசைகளில் 25 சுற்றுகளும் மற்றும் மேற்கு பகுதியில் உள்ள பிரதானக் கட்டடம், மின்னணுவியல் பரிசோதனைக் கூடம் வாக்கு எண்ணிக்கை அறை 2-இல் 7 மேசைகளில் 25 சுற்றுகள் என மொத்தம் 6 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

அதன்படி, 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 2,298 வாக்குச் சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள், 9 அறைகளில் 84 மேசைகளுக்கு சுமாா் 165 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com