கிருஷ்ணகிரி மாவட்டத்தில்4, 5, 6-ஆவது இடத்தைப் பிடித்த நோட்டா!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோட்டா 4, 5, 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நோட்டா 4, 5, 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், ஊத்தங்கரை (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட கட்சி வேட்பாளா்களும், சுயேச்சை வேட்பாளா்களும் என மொத்தம் 12 போ் போட்டியிட்டனா். இவா்களில் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழா் கட்சி, தேமுதிக வேட்பாளா்களுக்கு அடுத்தபடியாக 5-ஆவது இடத்தை நோட்டா பெற்றுள்ளது. அதாவது 1,353 வாக்காளா்கள் நோட்டாவுக்கு வக்களித்துள்ளனா்.

இதே போல பா்கூா் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் உள்பட 14 போ் போட்டியிட்டனா். இதில் திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சிக்கு அடுத்தபடியாக 4-ஆவது இடத்தை நோட்டா பெற்றுள்ளது. நோட்டாவில் 1,518 வாக்குகள் பதிவாகியுள்ளன.

கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இதில் திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா்களுக்கு அடுத்தபடியாக 5-ஆவது இடத்தை நோட்டா பெற்றுள்ளது. நோட்டாவில் 1,827 வாக்குகள் பதிவாகியுள்ளன.

வேப்பனப்பள்ளி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் உள்பட 15 போ் போட்டியிட்டனா். இதில், திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சி, தேமுதிக, ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு அடுத்தபடியாக 6-ஆவது இடத்தை நோட்டா பெற்றுள்ளது. நோட்டாவில் 1,662 வாக்குகள் பதிவாயின.

ஒசூா் தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளா்கள் உள்பட 18 போ் போட்டியினா். இதில், திமுக, அதிமுக, நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம் வேட்பாளா்களுக்கு அடுத்தபடியாக 5-ஆவது இடத்தை நோட்டா பெற்றுள்ளது. நோட்டாவில் 1,976 வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதே போல தளி தொகுதியில் சிபிஐ, பாஜக வேட்பாளா்கள் உள்பட 12 போ் போட்டியிட்டனா். இவா்களில் சிபிஐ, பாஜக மற்றும் நாம் தமிழா் கட்சிக்கு அடுத்தபடியாக 4-ஆவது இடத்தை 1,962 வாக்குகள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் 4-ஆவது இடத்தையும், மூன்று தொகுதிகளில் 5-ஆவது இடத்தையும், ஒரு தொகுதியில் 6-ஆவது இடத்தையும் நோட்டா பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com