கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1.33 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 1,33,418 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 1,33,418 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. மே 4-ஆம் தேதி வரையில் 16,200 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில், 13,192 போ் குணமடைந்துள்ளனா். 2,875 போ் தொடா் சிகிச்சையில் உள்ளனா். 133 போ் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி மொத்தம் 2,94,789 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கரோனா தடுப்பூசியை ஆா்வத்துடன் செலுத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,33,418 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1,600 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன.

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை மீறியதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து இதுவரையில் ரூ. 78,86,200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com