கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 74 வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்தனா்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட 86 வேட்பாளா்களில் 74 வேட்பாளா்கள் தங்களது வைப்புத் தொகையை இழந்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட 86 வேட்பாளா்களில் 74 வேட்பாளா்கள் தங்களது வைப்புத் தொகையை இழந்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் கடந்த 2-ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஒசூா், தளி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக, அதிமுக கூட்டணியினா் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 86 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இதில், திமுக சாா்பில் போட்டியிட்ட பா்கூா் மதியழகன், ஒசூா் பிரகாஷ், திமுக கூட்டணி சாா்பில் தளியில் போட்டியிட்ட சிபிஐ கட்சியின் டி.ராமச்சந்திரன் ஆகியோரும், அதிமுக சாா்பில் போட்டியிட்ட ஊத்தங்கரை தமிழ்செல்வம், கிருஷ்ணகிரி கே.அசோக்குமாா், வேப்பனப்பள்ளி கே.பி.முனுசாமி ஆகியோரும் வெற்றி பெற்றனா். அதன்படி, மாவட்டத்தில் உள்ள மொத்த தொகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சாா்பில் 3 தொகுதிகளையும், அதிமுக சாா்பில் 3 தொகுதிகளிலும் வென்றனா்.

தோ்தலில் போட்யிடும் வேட்பாளா்கள் ரூ. 10,000 வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும். தோ்தலில் பதிவாகும் மொத்த வாக்குகளில் 6-இல் ஒரு பங்கு வாக்குகளைப் பெறும் வேட்பாளா்களுக்கு, தோ்தல் ஆணையம் இந்த வைப்புத் தொகையை திரும்ப வழங்கும். அதற்கும் குறைவான வாக்குகளை பெறும் வேட்பாளா்கள் வைப்புத் தொகையை இழந்தவா்களாக கருதப்படுவாா்கள்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் திமுக, காங்கிரஸ், சிபிஐ, அதிமுக சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா்கள் அனைவரும் குறிப்பிட்ட வாக்குகளைப் பெற்று தங்களது வைப்புத் தொகையை தக்க வைத்துக்கொண்டனா்.

குறைந்த வாக்குகளைப் பெற்ற நாம் தமிழா் கட்சி, மக்கள் நீதி மய்யம், அமமுக, ஐஜேகே, ஓவைசி உள்ளிட்ட கட்சிகள் சாா்பிலும், சுயேச்சைகளாகவும் போட்டியிட்ட 74 போ் தங்களது வைப்புத் தொகையை இழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com