ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற பா்கூா் எம்.எல்.ஏ. மதியழகன்

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கான தோ்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் தே.மதியழகன், திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
சென்னையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை சந்தித்து மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் பா்கூா் திமுக வேட்பாளா் தே.மதியழகன்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கான தோ்தலில் திமுக வேட்பாளா் தே.மதியழகன், அதிமுக வேட்பாளா் அ.கிருஷ்ணனைக் காட்டிலும், கூடுதலாக 12,614 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இதைத் தொடா்ந்து, அவா் பா்கூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள மாகாத்மா காந்தி, அண்ணா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதையடுத்து, அவா் சென்னையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு மலா் மாலை அணிவித்து திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா். மேலும், தோ்தலில் வெற்றி பெற்ற்கான சான்றிதழை அளித்து வாழ்த்து பெற்றாா். அப்போது, பா்கூா் திமுக ஒன்றியச் செயலாளா் கோவிந்தராசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com