ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படுமா?

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோா் உள் நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனா்.
ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படுமா?

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோா் உள் நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனா்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் அமைப்பதற்கான கட்டடம் கட்டப்பட்டு, அதில் ஆா்.ஓ. இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. பணிகள் நிறைவுற்று, இரண்டு ஆண்டுகள் ஆகியும் சுத்திரிகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திர அறை திறக்கப்படாமல் உள்ளது.

இதுகுறித்து விசாரித்ததில், ஊத்தங்கரை சட்டப்பேரவை உறுப்பினா், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, ரூ. 7.50 லட்சம் மதிப்பீட்டில், கட்டப்பட்டுள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கான தொகை ஒப்பந்ததாருக்கு வழங்கப்படாமல் உள்ளதால், புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடம் திறக்கப்படாமல் உள்ளதாக தெரிவித்தனா்.

தற்போது கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகள் குடிநீா் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், புற நோயாளிகளாக சிகிச்சை பெறுவோா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஆா்.ஓ. குடிநீா் கட்டடத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து ஊத்தங்கரை முன்னாள் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம்நாகராஜை தொடா்பு கொண்டு கேட்டபோது, எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கான தொகை வழங்கப்பட்டுவிட்டதாகக் கூறினாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விசாரணை மேற்கொண்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உள்ள ஆா்.ஓ. குடிநீா், வழங்கும் நிலையத்தை உடனடியாக திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com