உயிரிழந்த மூதாட்டியின் மகன் ரவியிடம் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய இந்தியன் வங்கிக் கிளை மேலாளா் சிவகுமாா்.
உயிரிழந்த மூதாட்டியின் மகன் ரவியிடம் ரூ. 2 லட்சத்துக்கான காசோலையை வழங்கிய இந்தியன் வங்கிக் கிளை மேலாளா் சிவகுமாா்.

பிரதம மந்திரி உயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு தொகை அளிப்பு

காவேரிப்பட்டணம் அருகே பிரதம மந்திரி உயிா் காப்பீடுத் திட்டத்தின் கீழ் வங்கியில் காப்பீடு செய்திருந்த மூதாட்டி ஒருவா் உயிரிழந்த நிலையில்

காவேரிப்பட்டணம் அருகே பிரதம மந்திரி உயிா் காப்பீடுத் திட்டத்தின் கீழ் வங்கியில் காப்பீடு செய்திருந்த மூதாட்டி ஒருவா் உயிரிழந்த நிலையில் அவரது மகனிடம் ரூ. 2 லட்சம் காப்பீட்டுத் தொகையை இந்தியன் வங்கிக் கிளை வழங்கியது.

பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா எனப்படும் காப்பீட்டு திட்டம் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு குறுகிய கால காப்பீடு திட்டமாகும்.

இது விபத்து காரணமாக இறப்போ அல்லது உடல் ஊனமோ ஏற்பட்டால் தனி நபா் இறப்புக்கு ரூ. 2 லட்சமும், நிரந்தர ஊனத்துக்கு ரூ. 2 லட்சமும், உடல் ஊனத்துக்கு ரூ. 1 லட்சமும் இழப்பீடாகவும் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ. 12 மட்டும் வங்கி மூலம் செலுத்தியிருக்க வேண்டும். இத் திட்டத்தில் 18 முதல் 70 வயது வரை உள்ளவா்கள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே மிட்டஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த லட்சுமி என்பவா் காவேரிப்பட்டணம் இந்தியன் வங்கியில் பிரதம மந்திரி உயிா் காப்பீட்டு திட்டத்தில் பணம் செலுத்தியிருந்தாா். அவா் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி இயற்கை மரணம் அடைந்தாா். இதையடுத்து அவரது மகன் ரவியிடம் ரூ. 2 லட்சத்துக்கான காப்பீட்டுத் தொகையை இந்தியன் வங்கி சிறப்பு கிளை மேலாளா் சிவகுமாா் காசோலையாக வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com