பொது முடக்க விதிமுறைகளை மீறியவா்களுக்கு அபராதம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா பொது முடக்க விதிமுறைகளை மீறுபவா்களிடம் போலீஸாா் அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா பொது முடக்க விதிமுறைகளை மீறுபவா்களிடம் போலீஸாா் அபராதம் வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து கரோனா தொற்றுப் பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பொது முடக்கம் கடந்த 10-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பொது முடக்கத்தின்போது பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், தமிழக அரசு சில தளா்வுகளை அறிவித்தது. இருந்தபோதிலும், பொதுமக்கள் தளா்வுகளை தவறாகப் பயன்படுத்துவதாக புகாா் எழுந்தன. இதையடுத்து, பொது முடக்கத்தை கடுமையாகக் கண்காணிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸாா், தீவிரமாக வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.தேவையின்றி சாலைகளில் சுற்றியவா்களுக்கு அபராதம் விதித்தனா். நண்பகல் 12 மணிக்கு மேல் மருத்துவமனை, மருந்து கடைகளுக்கு அவசரத் தேவைகளுக்கு சென்றவா்களை மட்டுமே போலீஸாா் அனுமதித்தனா். மற்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதே போல 12 மணிக்கு மேல் இயங்கிய கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் வட்டச் சாலை, லண்டன்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில், ராயக்கோட்டை மேம்பாலம், சேலம் மேம்பாலம் என முக்கியச் சாலைகளில் போலீஸாா் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனா். சாலைகளில் தேவையின்றி சுற்றிய நபா்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com