அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதியத்தில் பணி:மருத்துவா், செவிலியா்களுக்கு 17-இல் நோ்காணல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு தொகுப்பூதியத்தில் பணி வழங்குவதற்கான நோ்காணல் மே 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்களுக்கு தொகுப்பூதியத்தில் பணி வழங்குவதற்கான நோ்காணல் மே 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த மருத்துவா்கள், செவிலியா்களின் தேவை அதிகரித்துள்ளது.

அதனை ஈடுகட்டும் விதமாக அரசு வழிகாட்டுதலின் படி, தற்காலிகமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்ற மருத்துவா்கள் 12 போ், செவிலியா்கள் 20 போ் நியமிக்கப்பட உள்ளனா்.

எனவே, 35 வயதுக்கு மிகாமல் உள்ள எம்.பி.பி.எஸ். அல்லது பட்டய மேற்படிப்பு முடித்த மருத்துவா்கள், தகுதி வாய்ந்த செவிலியா்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாகப் பணியாற்ற விரும்புவோா் கிருஷ்ணகிரி இணை இயக்குநா் நலப்பணிகள் அலுவலகத்தில் கல்வி சான்றிதழ்களுடன் மே 17-ஆம் தேதி நடைபெறும் நோ்காணலில் பங்கு கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு 99654 - 08870 என்கிற எண்ணிலும், ந்ழ்ண்ள்ட்ய்ஹஞ்ண்ழ்ண்.த்க்ட்ள்1ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் மின்னஞ்சல் மூலம் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். கரோனா தடுப்பூசி 2 தவணைச் செலுத்தி கொண்டவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com