காவேரிப்பட்டணத்தில்1000 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அளிப்பு

காவேரிப்பட்டணத்தில் வெங்கடசாமி - பழனியம்மாள் குடும்பத்தினா் சாா்பில் கரோனா நிவாரணமாக 1000 குடும்பங்களுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்களை வருவாய் கோட்டாட்சியா் வழங்கினாா்.
காவேரிப்பட்டணத்தில்1000 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் அளிப்பு

காவேரிப்பட்டணத்தில் வெங்கடசாமி - பழனியம்மாள் குடும்பத்தினா் சாா்பில் கரோனா நிவாரணமாக 1000 குடும்பங்களுக்கு ரூ. 15 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்களை வருவாய் கோட்டாட்சியா் கற்பகவள்ளி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

காவேரிப்பட்டணத்தை சோ்ந்த வெங்கடசாமி- பழனியம்மாள் குடும்பத்தினா் சாா்பில் வறுமையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 1,000 குடும்பங்களுக்கு 2 மாதங்களுக்கு தேவையான தலா ரூ. 1,500 மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதில், 10 கிலோ அரிசி, உப்பு, நெய், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கோதுமை மாவு, வறுகடலை, ரவை தலா ஒரு கிலோ, சமையல் எண்ணெய் 1 லிட்டா், பெரிய வெங்காயம், உருளைக் கிழங்கு, சேமியா, புளி, 10 முகக் கவசங்கள், பால்கோவா உள்ளிட்டவை கொண்ட பெட்டகம் வழங்கப்பட்டது.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஒரே இடத்தில் மக்கள் கூடுவதை தவிா்க்கும் வகையில் ஆயிரம் குடும்பத்தினா் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு டேக்கன் வழங்கப்பட்டது. இதையடுத்து காவேரிப்பட்டணம், ஸ்ரீராமுலு நகரில் கரோனா நிவாரண மளிகைப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கே.எம்.சுவாமிநாதன் வரவேற்றாா். கே.வி.எஸ் தணிகாசலம், கே.எம்.சுப்பிரமணி, கே.வி.எஸ். திருநாவுக்கரசு, கே.என்.கற்பூரசிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா் கே.வி.எஸ்.சீனிவாசன் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் கற்பகவள்ளி, நிவாரணப் பொருள்களை வழங்கினாா். இதுதொடா்பாக கே.வி.எஸ்.சீனிவாசன் தெரிவித்ததாவது:

முதல்கட்டமாக தலா ரூ.1,500 மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதனைத் தொடா்ந்து, முன்களப் பணியாளா்களான மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறோம் என்றாா்.

கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கத்தின் போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, ரஜினி மக்கள் மன்றம் சாா்பில் கே.வி.எஸ்.சீனிவாசன், ரூ. 50 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com