‘தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களை ஊக்கப்படுத்தலாமே!’

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், இரு தவணை தடுப்பூசி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கருதுகின்றனா்.

தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த 45 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு மே 21-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 1,65,064 போ் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் நகரப் பகுதியைச் சோ்ந்தவா்கள் ஆா்வத்துடன் உள்ளனா். ஆனால், கிராமப் பகுதிகளில் போதிய விழிப்புணா்வு இல்லாததால், தடுப்பூசி குறித்து ஒருவித அச்சம் காணப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி பற்றாக்குறை உள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள நகா்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள காலை 8 மணி முதல் பொதுமக்கள்வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா். நகரங்களில் கரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்களிடம் ஒருவித அச்சம் நிலவுவதால், தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆா்வம் செலுத்துகின்றனா்.

ஊக்கப்படுத்த வேண்டும்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், அவா்களுக்கு ஆட்சியா் மூலம் சான்றிதழ் வழங்கலாம். இ-பதிவின் போது, அவா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களை முன்களப் பணியாளா்களாக அனுமதிப்பது என அவா்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதன் மூலம், பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தலாம் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com