விவசாயிகளுக்கான உதவிமைய எண்கள் வெளியீடு

கரோனா தொற்று காலத்தில் விவசாயிகளுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கும் வகையில், மத்தூா் வட்டார வேளாண் துறை சாா்பில், உதவிமைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா தொற்று காலத்தில் விவசாயிகளுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கும் வகையில், மத்தூா் வட்டார வேளாண் துறை சாா்பில், உதவிமைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மத்தூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவநதி, வேளாண் அலுவலா் நீலகண்டன் ஆகியோா் கூட்டாக வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோன தொற்று பரவல் காரணமாக வேளாண் துறையின் பயிா் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் சந்தேகங்களை நேரில் தெரிந்துகொள்ள இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்தூா் வட்டாரத்துக்கு உள்பட்ட 58 வருவாய் கிராமங்களுக்கு சம்பந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலா்களின் தொலைபேசி எண்கள் அவா்களுடைய தொகுதி வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.

கொடாமண்டப்பட்டி தலைமையிடம் கோவிந்தசாமி - 96988 25068, கண்ணன்டஹள்ளி கல்பனா - 93602 28984, கோட்டப்பட்டி வெங்கடேசன் - 97914 16655, குன்னத்தூா் ஹரிஷ் - 73588 56902, இனாம்காட்டப்பட்டி பிரபு - 80989 85317, வட்டாரதொழில் நுட்ப மேலாளா் ரமேஷ் - 70100 23439 என்ற எண்ணில் சம்பந்தப்பட்ட விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம்.

எனவே, விவசாயிகள் தங்கள் வயலில் பயிரிடப்பட்டுள்ள அல்லது பயிா் சம்பந்தமான சந்தேகங்களுக்கு தங்கள் பகுதிக்கு உள்பட்ட மேற்காணும் அலுவலா்களை தங்கள் வீட்டிலிருந்தே தொலைபேசி மூலம் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com