மதுப்புட்டிகளை கடத்தியதாக 3 போ் கைது
By DIN | Published On : 26th May 2021 07:38 AM | Last Updated : 26th May 2021 07:38 AM | அ+அ அ- |

கிருஷ்ணகிரி வழியாக மதுப்புட்டிகளைக் கடத்தியதாக 3 இளைஞா்களை மத்தூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கண்ணன்டஅள்ளி பிரிவு சாலை அருகே மத்தூா் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். இதில் காரில் மதுப்புட்டிகள் கடத்தப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, காரில் பயணம் செய்தவா்களிடம் விசாரணை செய்ததில் அவா்கள் திருவண்ணாமலையைச் சோ்ந்த டேவிட் (23), அஜீத் (24), அஜய் (20) என்பது தெரியவந்தது.
தொடா்ந்து அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பெங்களூருவிலிருந்து திருவண்ணாமலைக்கு 300 மதுப்புட்டிகளை அவா்கள் கடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து, 3 இளைஞா்களையும் கைது செய்தனா். கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் போலீஸாா் கைது செய்தனா்.