'கரோனாவால் இறப்போரின் சடலங்களை ஒசூர் மாநகராட்சி இலவசமாக எரிக்க வேண்டும்'

கரோனா காலங்களில் உயிரிழக்கும் நோயாளிகளில் சடலங்களை ஓசூர் மாநகராட்சி மின்சார தகன மேடையில் இலவசமாக எரிக்க வேண்டும் என ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ்.
ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ்.

கரோனா காலங்களில் உயிரிழக்கும் நோயாளிகளில் சடலங்களை ஓசூர் மாநகராட்சி மின்சார தகன மேடையில் இலவசமாக எரிக்க வேண்டும் என ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒசூர் மாநகராட்சியில் கரோனா நோய் தொற்றால் இறக்கும் சடலங்களை எரிக்க ரூபாய் நான்காயிரம் முதல் ரூபாய் 10,000 வரை வசூலிக்கப்படுவது ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஓசூர் இஎஸ்ஐ மருத்துவமனை சீதா ராம் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை நேரில் ஆய்வு செய்த ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், பின்னர் ஓசூர் மாநகராட்சி தகனமேடை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது, தமிழக முதல்வர் முகஸ்டாலின் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பொது முடக்கம் காலத்தில் தொழிலாளர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் வேலை வாய்ப்பை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாள்தோறும் 200க்கும் மேற்பட்டவர்கள் ஓசூரில் நோய்தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஓசூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிலர் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் ஆர். காந்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் ஓசூர் மாநகராட்சியில் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்லாமல் வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமலும் கூலி வேலை செய்ய முடியாமலும் நிலை உள்ளது. 

கரோனாவால் சிலர் உயிரிழந்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு கடுமையான மனவேதனை இருக்கும் நிலையில் சடலங்களை மின்சார தகன மேடையில் எரிக்க கூடுதலாக பணம் வசூலிக்கப்படுவதை மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சடலங்களை இலவசமாக எரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தகன மேடை அருகில் இதற்கான விளம்பரப் பலகையை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகனிடம் தெரிவித்தார். 

மேலும் உயிரிழக்கும் நோயாளிகளின் உறவினர்களிடம் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் ரூபாய் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை மொத்தமாக பெற்றுக்கொண்டு நோயாளிகளின் சடலங்களை ஓசூர் மாநகராட்சியில் மின்சார தகன மேடையில் எரித்து வருவதாக புகார் வந்த வண்ணம் உள்ளது. ஓசூர் மாநகராட்சியில் தகனமேடையை பராமரித்து வரும் ரோட்டரி சங்கம் மூலம் ஒரு சடலத்துக்கு ரூபாய் 4000 வசூலித்து வருகின்றனர். இந்த கரோனா காலத்தில் சடலங்களை எரிக்க 4000 வசூலிக்கப்படுவதை ரத்து செய்து இலவசமாக எரிக்க ஓசூர் மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கூடுதல் கட்டணத்தை ஒசூர் வருவாய் கோட்டாட்சியர் குணசேகரன் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இந்த கரோனா காலம் முடியும் காலம் முடியும் வரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தாலும் அல்லது சாதாரணமாக உயிர் இழந்தாலும் கட்டணமின்றி உடல்களை  எரியூட்ட மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது ஒசூர் முன்னாள் எம்எல்ஏ எஸ்-ஏ-சத்யா மாவட்ட அவைத்தலைவர் ஆ.யுவராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com