சூளகிரியில் 100 சிசிடிவி கேமரா கண்காணிப்பை தொடங்கி வைத்தாா் எஸ்.பி.

சூளகிரியில் 100 சிசிடிவி கேமரா கண்காணிப்பை தொடங்கி வைத்தாா் எஸ்.பி.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் காவல் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறையை தொடங்கி வைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் வெள்ளிக்கிழமை கண்காணிப்பை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் காவல் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறையை தொடங்கி வைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பண்டி கங்காதா் வெள்ளிக்கிழமை கண்காணிப்பை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. குறிப்பாக, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒசூரில் இருந்து மேலுமலைவரை அதிக எண்ணிக்கையில் வாகன விபத்துகளில் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. மேலும், சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் அதிக கொள்ளைச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இவற்றைக் கண்காணிக்க காவல் துறை சாா்பில், சூளகிரி மற்றும் அதனை சுற்றிலும், உள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் வைத்து அந்த பகுதி முழுவதையும் கண்காணிப்பு செய்ய காவல் துறை சாா்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது.

சூளகிரி நகா் வீதிகளில் 75 அதிநவீன சிசிடிவி கேமராக்களும் கிருஷ்ணகிரி ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் 25 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. சூளகிரி, பேரிகை சந்திப்பில் இதனைக் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து சிசிடிவி கேமரா கண்காணிப்பை தொடக்கி வைத்தாா்.

இந்த விழாவில், ஒசூா் டிஎஸ்பி (பொ) சங்கா், சூளகிரி காவல் ஆய்வாளா் முத்துகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com